Wednesday, November 5, 2014

சிந்தனைத்தூறும் அறிவு

(கவனம்: 
உங்கள் மனதில் இப்பதிவு குறித்த சிந்தனை ஓட்டம்
சில நிமிடங்களாவது, 
கடந்து போன ரயிலின் டக், டக்.... டக், டக்... ஓசையைப் போல
நீடித்து இருக்கும்.
அவ்வப்போது தூக்கத்தில் இருந்து விழித்துப் பார்க்கும்......
இது குறித்து உங்கள் நினைவுகளை CONVERGENT ஆகவோ
DIVERGENT ஆகவோ அலைக்கழிக்கும்.....)


பரதன் காட்டிற்கு சென்று
ராமனிடம் பாதுகைகளை பெற்றுக்கொண்டு
அயோத்தி திரும்பும் முன்னர்....

அரண்மனையில் கைகேயீயிடம் கூனியின் சதிச்சொல்:
" அம்மா கைகேயீ,
பரதனை காட்டிற்கு அனுப்பி,
ராமனின் பாதுகைகளைப் பெற்று வந்து,
சிம்மாசனத்தில் வைத்து,
ராமன் சார்பாக
பரதன் ஆட்சி செய்வதாக கூறினால்...
மக்கள் மட்டுமல்ல...
தசரத மன்னன் கூட
நம் மகன் பரதனை பாராட்டக்கூடும்....
என்ன சொல்கிறாய்?" 

அதன் பின் நடந்தது நாடறிந்தது...

பின்புலத்தில் கூனி மனதின் கபட எண்ணம் நாடறியாதது..... :


" ராமா... !
பாதுகை அணிந்து கொண்டு காட்டிற்கு சென்றுள்ளாயா..!!.
இரு.. !!!
அதையும் பிடுங்கிக் கொணரச் செய்கிறேன்..... !!!
பதினான்கு ஆண்டுகள் கழிந்து
நீ திரும்பி வருமுன்னரே ...
காட்டில் உள்ள விஷ முட்களும் விஷப்பூச்சிகளும்
உன் தாமரை மலர்ப்பாதங்களை தாக்கி,
SEPTIC ஆகி,
புரையோடி
அங்கேயே மடிந்து போ...!!!. ''

No comments:

Post a Comment